Skip to main content

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது

"சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் 'கோழியூர்' என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி 'கோழியூர்' என்று பெயர் சூட்டினார்களாம்


பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் 'கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர்.

சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும்.



பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage)




மயில் பூதி நிற கோழி  (Old lineage)


பூதி சேவல்  (Old lineage)




வால் பொன்றம்  பட்டா 






கிளி மூக்கு சேவலை (Old Lineage)


உதாரணமாக நல்ல பெருவெட்டு சேவலுக்கு சில்லு குஞ்சுகளாக பொரிக்கும், நாம் ஏன் என்ற குழப்பத்தில் இருப்போம், காரணம் சேவலின் வீரியத்தன்மை கோழியை விட குறைவு, அதனால் தான் சேவல்போல குஞ்சுகள் பொரிப்பதில்லை. வெப்போர் மற்றும் சண்டை சேவல் வளர்க்கும் கட்டாளிகளுக்கு இது நன்கு தெரியும், அவர்கள் தன் இனவெளி சேவல்களை வேறு கோழிகளுடன் கலக்க மாட்டார்கள், சேவல்களுக்கு ஏற்ற கோழிகளை வைத்திருப்பார்கள், மேலும் சேவல்களை விற்பனை செய்வார்களே தவிர கோழிகளை விற்பனை செய்ய மாட்டார்கள். சரியான இனவழிகளை கலப்பதன் மூலமே நல்ல குஞ்சுகளை எடுக்க முடியும். ஒரு நல்ல இனவெளியை கோழியால் மட்டுமே தன் பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல முடியும். நான் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த கோழிகள் இப்போது எங்கும் இல்லை, பழைய இன கோழிகள் சேவலுடன் சண்டை இட்டு சேவலை கொன்றதை நான் பார்த்துள்ளேன். அப்படி பட்ட கோழிகள் இப்போது மிக குறைவு பழைய வளர்ப்பாளர்களிடம் மட்டுமே உண்டு. அப்படி பட்ட கோழிகள் முட்டை இடும் திறன் அதிகம் 15 முதல் 16 முட்டை வரை இடும், ஆனால் தற்போதுள்ள கோழிகள் 8 முதல்  9 முட்டை வரை மட்டும் தான் இடுகிறது.

நம் எல்லோருடைய எண்ணம் குஞ்சுகள் சேவல் போல் பிறக்க வேண்டும், ஒரு வேலை கோழி போல அனைத்து குஞ்சுகளும் பொரித்து விட்டால், அந்த கோழியை நாம் கழித்து விடுவோம். அதற்க்கு அர்த்தம் அது நல்ல கோழி இல்லை என்பதால் அல்ல, வீரியமான கோழி என்று அர்த்தம், அவ்வகையான கோழிகளுக்கு அதைவிட அதிகமாக வீரியமுள்ள சேவலை சேர்க்க வேண்டும். இது தான் குஞ்சு உற்பத்தியாளர்களின் (Breeders) நேர்த்தி. இப்போது நம்மில் பலரும் குஞ்சு உற்பத்தியாளர் ஆவதில்லை, சேவல்களை வாங்கி கட்டில் போட்டு வளர்த்து விற்கும் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். இந்த பதிவு இளம் வளர்ப்பாளர்களுக்கு, நீங்கள் சேவலுக்கு எத்துணை முக்கியம் தருகிறீர்களோ, அதே முக்கியத்துவத்தை கோழிகளுக்கும் கொடுங்கள்.

இந்த பக்கத்தை பற்றிய உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
  

Comments

Post a Comment

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள...

வீட்டுக்கு ஒரு சேவல்

வால் சேவல்கள் அழிந்து வருவது சுடும் உண்மை இந்த நூற்றாண்டில் சேவல்கள் செல்லப்பிராணியாக பலர் வீடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது, இதை தொழில்ரீதியாக்கி பல குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சேவல்கள்களின் முரட்டுத்தனம் மூர்க்கத்தனத்தை மையமாகவைத்து வளத்துவந்த சேவல் வளர்ப்பு காலப்போக்கில் மறைந்து, அழகுக்காக மட்டுமே தற்போது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் சேவல்வளர்ப்பாளர்கள் பெரும் பொறுப்பை நோக்கியே நடை போடுகின்ற்னர் .                           சேவல்வளர்ப்பு என்பது ஒரு கலை நம் பண்பாடுடனும், பாரம்பரியத்துடனும் கலைந்தது, அதுனால்தான் இன்னும் அந்த கலை நம் கிராமங்களில் அழிவதில்லை. சேவல் வளர்ப்பாளர்களுக்கு எப்போதும் கடும் சோதனைகள் தான், செல்லப்பிராணிகள் மீது வைக்கும் அன்பை சமுதாயமும் சுற்றமும் குறைகூறிகொன்டேயிருக்கும், செல்லப்பிராணிகளாக நாய்களை ஏற்றுக்கொண்ட சமுதாயம் சேவல்களை ஏற்க ஏனோ இவ்வளவு தாமதம். இதில் படித்தவர்கள் ஈடுபட்டால் இந்த சமூகத்தின் பார்வையே வேறு.  சேவல்களை வளர்ப்பதை மக்கள் வே...