Skip to main content

வீட்டுக்கு ஒரு சேவல்

வால் சேவல்கள் அழிந்து வருவது சுடும் உண்மை


இந்த நூற்றாண்டில் சேவல்கள் செல்லப்பிராணியாக பலர் வீடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது, இதை தொழில்ரீதியாக்கி பல குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சேவல்கள்களின் முரட்டுத்தனம் மூர்க்கத்தனத்தை மையமாகவைத்து வளத்துவந்த சேவல் வளர்ப்பு காலப்போக்கில் மறைந்து, அழகுக்காக மட்டுமே தற்போது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் சேவல்வளர்ப்பாளர்கள் பெரும் பொறுப்பை நோக்கியே நடை போடுகின்ற்னர் . 
                   
     சேவல்வளர்ப்பு என்பது ஒரு கலை நம் பண்பாடுடனும், பாரம்பரியத்துடனும் கலைந்தது, அதுனால்தான் இன்னும் அந்த கலை நம் கிராமங்களில் அழிவதில்லை. சேவல் வளர்ப்பாளர்களுக்கு எப்போதும் கடும் சோதனைகள் தான், செல்லப்பிராணிகள் மீது வைக்கும் அன்பை சமுதாயமும் சுற்றமும் குறைகூறிகொன்டேயிருக்கும், செல்லப்பிராணிகளாக நாய்களை ஏற்றுக்கொண்ட சமுதாயம் சேவல்களை ஏற்க ஏனோ இவ்வளவு தாமதம். இதில் படித்தவர்கள் ஈடுபட்டால் இந்த சமூகத்தின் பார்வையே வேறு.


 சேவல்களை வளர்ப்பதை மக்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றனர். வேலை இல்லாமல் காலையில் இறை, தண்ணீர் வைப்பது இதல்லாம் ஒரு பிழைப்பு என்று நிறைய பேர் ஏளனம் வாங்கியிருப்பேர்கள். அவர்களுக்கு என்ன தெரியும் இந்த கலையைபற்றி. என்றாவது காலையில் சேவல் கூவும் முன் எழுந்து அதன் கூண்டை திறந்து விட்ருப்பார்களா, வாரம் ஒரு முறை தவறாமல் குளிப்பாற்றிப்பார்களா, இல்லை அதன் உடல் நிலையை தொடன்று கவனித்து அதன் நோய்களை விரட்டியடித்திருப்பார்களா. வால்சேவல்களில் ஒரு வால் விழுந்தால் நமக்கு கை  உடைந்தது போல் இருக்கும், பிறகு அதை எடுத்து மயில் இறகு போல் பத்திரப்படுத்த அழகுபார்ப்போம். அதன் நடையை வைத்தால் அதன் மனதை கணித்துவிடுவோம். இதுமட்டுமா இத்தைகைய வளர்ப்பு எத்தனை பாடங்கள் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது தெரியுமா, சகிப்புத்தன்மை, தாய்மை, உக்கிரம், ஆண்மை, பங்கிடும் திறன், வழிநடத்தும் திறன் மற்றும் பல.



எத்தனையோ இடர்பாடுகளில் நாம் வளர்க்கும் இந்த சேவல்கள் ஏன் அழிவைத்தேடுகிறது. சிந்தித்து பாருங்கள் பாரம்பரிய சேவல்கள் அனைத்தும் அழிந்து வருகிறது காரணம் நம் அறியாமையே. உயரத்தாங்கு, பெருவெட்டு சேவல்களின் அழிவே இந்த கலையின் முடிவு. ஆம் நம்மில் சிலருக்கு சேவல்களை பற்றிய போதிய வழிகாட்டல் இன்மையே   இதற்க்கு காரணம். 

 முன்பெல்லாம் சாதி சேவல்கள் என்றாலே நம் பார்வைக்கு தனியாக தெரியும், அதன் உயரம் மற்றும் எடை நாட்டு சேவல்களை விட 3 முதல் 4 மடக்கு அதிகம் இருக்கும். ஆனால் தற்போது இத்தகைய சேவல்களை பார்க்க முடிகிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏதோ இருக்கும் சேவல்களை உற்பத்தி செய்து விற்கின்றனர். புதிதாய் வளர்ப்பவர்களோ சேவல்கள் இப்பிடித்தான் இருக்கும் போல என நினைத்து வளர்த்து வருகின்றனர். கிளிமூக்கு, கட்டை மூக்கு சேவல்கள், கோழிகள் வளர்த்தால் போதும் அதன் உயரம் பெருவெட்டு, எடை பற்றிய கவனம் நம்மில் பலருக்கு இல்லை. 5 வருடங்களுக்கு முன்னாள் இருந்த இனங்கள் இப்போது மொத்தமாக அழிந்துவிட்டன எதோ சிலர் ஓரிரு சேவல்கள், அதுவும் விலையில்லாமல் அழிவை நோக்கி பயணிக்கின்றன.


கிளி மூக்குகள் கிளிக்குத்தான் இருக்கும், கிளியின் உயரமும் எடையும் சேவல்களின் உயரமும் எடையும் ஒன்றாகுமா. இதை மட்டும் சிந்தித்துப்பாருங்கள். கிளி மூக்கு என்று கூறப்படுவது சேவல்களின் வளைந்த அலகையே, அது ஒவ்வாரு உயரத்திற்கும் எடைக்கும் மாறுபடும். உதாரணமாக 6 அடி மனிதனுக்கு அரை அடியில் கால்கள் இருந்தால் எப்படி இருக்கும்,  மாடுகளுக்கு நாய்களின் தலைகள் இருந்தால் எப்பிடி இருக்கும். இந்த புரிதல் இல்லாமல் தான் பெருவெட்டு மற்றும் உயரமான சேவல்கள் அழிந்துவருகின்றன.


குள்ளமாய் உள்ள சேவல்களுக்கு நல்ல கிளித்தலை மற்றும் அரை அடி வால் இருக்கும். அதன் உயரத்திற்கு அது அளவானது மற்றும் அழகானது தான். ஆனால் அதன் வாலை பிடிங்கிவிட்டு பாருங்கள் நாட்டுக்கோழி போல தான் தெரியும். பெருவெட்டு மற்றும் ஓங்குதாங்கான சேவல் மற்றும் கோழிகளுக்கு சின்ன கிளிபோன்ற தலை இயற்கையாகவே அமையாது. அதன் உயரம், எடைக்கு ஏற்றார் போல் அதன் தலையும் மாறுபடும். இந்த புரிதல் இல்லமால் எத்தனையோ பெருவெட்டு இனங்கள் அழுந்துவிட்டன. இருப்பினும் ஓரிரு சேவல் கலை வல்லுநர்கள் பழைய பெருவெட்டு இனங்கள் விலைபோகவிட்டாலும் அவற்றை மாற்றாமல் கலப்பினம் செய்யமல் பேணுகின்றனர். அவர்களை சேவல் வளர்ப்பாளர்களா நான்  பார்கவில்லை இவ்வின பாதுகாவலர்களாவே பார்க்கிறான்.
         
             சேவல் வளர்க்கும் என் நண்பர்களே ஒரு இனம் அழிந்தால் அதை திரும்ப கொண்டுவர எவவளவு முயற்சித்தாலும் முடியாது. இருக்கும் சேவல் இனங்களை அழியாமல் காப்போம் புதிய சரித்திரம் படைப்போம். 

Comments

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள்ளை நிற குருவிகளுக்கு நோ

ஒய்யார மயில்

  கலப்பின(ண )ங்கள்  எந்த காலகட்டத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது போல மாற்றம் அனைத்திலும் உண்டு: நம் சேவல்களில் அதிகம் உண்டு  இந்த மாற்றத்திர்கான தேடல் நம் நாட்டு இனங்களின் அழிவு, எதற்கு இந்த தேடல் ஆசையே அனைத்துக்கும் காரணம். நம் சேவல்களில் பல இனங்கள் உண்டு அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப்பண்பை பெற்றிருக்கும் இத்தகைய பண்புகள் கலப்பினங்களால் அழிந்துவிடுகின்றது. உதாரணமாக ஆந்திர மாநில சேவல்களின் கிளி மற்றும் குட்டை மூக்கு நம் இனங்களுக்கும இல்லை இவை நம்முடன் கலப்பினம் செய்யப்படும்போது உயரத்தை இழந்துவிடுகிறது மேலும் குஞ்சு பொரிக்கும் தன்மையும் குறைகிறது. சேவல்கள் இயற்கையாகவே 12 முதல் 15 குஞ்சுகள் வரை பொரிக்கும் தன்மை கொண்டது, ஆனால்  தற்போது 4 இல்லை 5. மேலும் நம் இனங்கள் நம் சூழலுக்கும் ஏற்ப தகவமைப்பை கொண்டவை கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் வாழும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது கட்டுத்தரையில் காற்றாடியும், மழைக்கு மருந்து டானிக்கும் தான் தேவையாக இருக்கிறது. நம் இனங்களில் உள்ள பெருவெட்டு நமக்கே உரித்தான ஒன்று அது எந்த மாநில சேவல்களுக்கும் இல்லை, ஆனால் தற்போதைய சூ

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Old lin