Skip to main content

தகர்க்கும் தமிழர்கள்

ஆந்திராவை உடைக்கும் தமிழர்கள் 

சேவல்கள் தமிழ்நாட்டிற்கு  மட்டும் உரிமை கூற முடியாது, இவை உலகம் எங்கும் பரவலாக பெயர்போனவை. நமக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் இவை அதிகம், அங்கு சேவல் கட்டிற்கு தடைகள் கிடையாது. 



அவ்வாறான ஆந்திர மக்கள் பெரிதும் விரும்புவது நம் தமிழ்நாட்டு சேவல்களே. வாரம் வாரம் நம்ம ஊரு சந்தையை அலசி கிடைக்கிற பொருள தூக்கிட்டு போவாங்கே. அதுக்காக அந்த ஊருல நல்ல சேவல்கள் இல்லேனு அர்த்தம் இல்ல, நம்ம ஊரு சேவல்களின் தரம், உயரம், மூர்க்கம், நிறம், வளர்ப்பு, இதுனால ஈர்க்கப்பட்டு வாங்கிட்டு போறாங்க.


இவங்க இப்பிடி ஒரு பக்கம் இருக்கும் போது நம்ம கிளி மூக்கு வால்சேவல் வளர்கிற ஒரு சில மக்கள் ஆந்திர சேவல்களை இங்க கொண்டுவந்து குஞ்சு இறக்கி இது என் லைனேஜ் (Linage) னு சொல்லி மக்களை ஏமாத்திட்ருக்கங்கே. இது ஒன்னும் தப்பு இல்லையேனு நீங்க கேக்கலாம். தப்பு இல்ல ஆனா என்ன நம்ம நாட்டு இனங்களை அழிச்சுருவாங்க. ஜல்லிக்கட்டு பஞ்சாயத்துக்கு அப்பறம் தான் நாட்டு இனங்கள பாதுகாக்கணும்னு  நம்ம மக்கள் கிளம்பிருக்காங்க  ஆனா இப்பிடி வேற மாநிலத்து இனங்கள  கொண்டு வந்து நம்மளோட தனித்தன்மையை கெடுக்கிறாங்க. இத தெரிந்து பண்ணுறாங்களா, தெரியாம பண்ணுறாங்களானு தெரியல, ஆனா இப்பிடி பண்ணுறதால, ஒன்னு வேகமா சம்பாரிக்கலாம், இன்னுனு பல வருசமா சேவல் வளக்கிறவங்களவிட வேகமா பெயர் எடுக்கணும்னு எண்ணம் தான்.





ஆந்திர கிளி மூக்கு



தமிழ்நாட்டு கிளி மூக்கு

இதுனால என்ன ஆக போகுதுனு நீங்க கேட்கலாம் 

*முதல்ல உனக்கு பிறந்த குழந்தைக்கு அப்பா நீ இல்லனு சொல்லுற
   மாதிரி இது உன் இனம் இல்ல.
*உன்ன நம்பி வாங்குறவன் உன்னால ஏமாத்த படுறான்.
* நம்ம இனங்கள் மாதிரி உயரம் வால் வராது, நோய் எதிர்ப்பு  திறன் 
  ரொம்ப கம்மி.
*முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் திறன் குறைவு நம் இனங்களை விட
*இதுனால அடுத்துவர தலைமுறை பெருவெட்டு இனங்களே பாக்காது.
*வால்சேவல்களே முற்றிலுமா அழிந்திடும்.
*ஆந்திர சேவல்கள் உடல் எடை 2 - 3 கிலோ தான் இருக்கும்

நம் தமிழ்நாட்டு சேவல்கள் பார்வைக்கு 



நல்ல வால் நீள பட்டா



அசல் தமிழ்நாட்டு லைன்


 அசல் 
விசிறிவால் நூலான்


ம்ம தமிழ்நாட்டு லைன் இங்க உள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏத்தது போல் வாழக்கூடியது. இதன் குஞ்சு பொரிக்கும் தன்மை மற்றும் கரு கூடும் வீரியமும் அதிகம். அதினாலே தான் இந்தியா முழுவத்துக்கும் தமிழ்நாடு தான் மொத்த விற்பனையகம். 

நம்ம தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி இருந்தே சண்டை சேவல்கள் மற்றும் கோழிகள் வளக்குறாங்க.

"அகனர் வியன் முற்றத்துயச்
சுடர்நுதல் மடநோக்கின் 
நேரிழை மகளிர் உனக்குணாக் கவரும் 
கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை"

என்ற வரிகள் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோழி சண்டையை கண்டுகளிக்க கூடிய இளைஞர்கூட்டம் மகிழ்ச்சியால் சீழ்க்கை அடித்து ஆரவாரம் செய்ததை திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியில் குறிப்பிட்டுள்ளார். 



இனிமேலாது புதுசா வாங்கி வளக்குறவங்க நம்ம நாட்டு இனங்கள தெரிஞ்சுக்கிட்டு அத வாங்கி வளங்க.

Comments

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள்ளை நிற குருவிகளுக்கு நோ

ஒய்யார மயில்

  கலப்பின(ண )ங்கள்  எந்த காலகட்டத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது போல மாற்றம் அனைத்திலும் உண்டு: நம் சேவல்களில் அதிகம் உண்டு  இந்த மாற்றத்திர்கான தேடல் நம் நாட்டு இனங்களின் அழிவு, எதற்கு இந்த தேடல் ஆசையே அனைத்துக்கும் காரணம். நம் சேவல்களில் பல இனங்கள் உண்டு அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப்பண்பை பெற்றிருக்கும் இத்தகைய பண்புகள் கலப்பினங்களால் அழிந்துவிடுகின்றது. உதாரணமாக ஆந்திர மாநில சேவல்களின் கிளி மற்றும் குட்டை மூக்கு நம் இனங்களுக்கும இல்லை இவை நம்முடன் கலப்பினம் செய்யப்படும்போது உயரத்தை இழந்துவிடுகிறது மேலும் குஞ்சு பொரிக்கும் தன்மையும் குறைகிறது. சேவல்கள் இயற்கையாகவே 12 முதல் 15 குஞ்சுகள் வரை பொரிக்கும் தன்மை கொண்டது, ஆனால்  தற்போது 4 இல்லை 5. மேலும் நம் இனங்கள் நம் சூழலுக்கும் ஏற்ப தகவமைப்பை கொண்டவை கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் வாழும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது கட்டுத்தரையில் காற்றாடியும், மழைக்கு மருந்து டானிக்கும் தான் தேவையாக இருக்கிறது. நம் இனங்களில் உள்ள பெருவெட்டு நமக்கே உரித்தான ஒன்று அது எந்த மாநில சேவல்களுக்கும் இல்லை, ஆனால் தற்போதைய சூ

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Old lin