Skip to main content

திருவிழாக்கட்டு

பெருவெடை சேவல்கள்  (கட்டு சேவல்கள்)

இவ்வகையான சேவல்கள் நல்ல திடகார்த்தமான உடல் கட்டும் 4 முதல் 8 கிலோ வரையிலான எடை கொண்டவை. இவற்றின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா. பெருவெட்டு சேவல்கள் பெரும்பாலும் கட்டிற்கு தான் பயன்படுத்தப்படும், இவற்றின் பின்னங்காலில் கூர்மையான கத்தியை ஒன்றை கட்டி சண்டைக்கு விடுவார்கள். அனைத்து வகையான சேவல்களையும் கட்டிற்கு பயன்படுத்தலாம் ஆனால் இவ்வகை பெருவெட்டு சேவல்கள் கொஞ்சம் சிறப்பானவை. இவைகள் மூர்கத்தனமாகவும், தன் பலத்தை நிரூபிக்க சாகும் வரை சண்டையிடும் மேலும் தன் பலத்தையும், வீரத்தையும் கணக்கிட்டு அதற்க்கு ஏற்றாற்போல் சண்டையிடும் நுணுக்கம் தெரிந்தவை. அதனால் தான் இவை தமிழனின் பாரம்பரியமாக இருந்தது. ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு சேவல், அவற்றின் கூவல் ஒலி தான் காலை அலாரம். வருடம் முழுதும் மணல் கட்டில் இருக்கும், வருடம் ஒரு முறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் கட்டப்படும்.

குறிப்பாக சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையில் இதன் சிறப்பு ஒரு படி மேல். ஆம் மதுரையில் ஜல்லிக்கட்டு எப்படி பாரம்பரியமாக இருந்ததோ, அதேபோல் சேவல்கட்டும் இருந்தது. தன் குடும்ப சண்டைகளை கூட சேவல்கட்டில் வைத்து தீர்த்துக்கொள்வார்கள். மன்னர்கள் காலத்திலிருந்தே தொன்று தொட்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சித்திரை திருவிழாவில் கட்டு நடைபெறும் 5000க்கு மேல் சேவல்கள் கட்டில் பங்குபெறும், மதுரை வைகை ஆற்றுக்கு வடக்கே உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்டு நடைபெறும் (வெள்ளியங்குன்றம், மாத்தூர், கள்ளந்திரி). ஒரு சேவல் எத்தனை சேவல்களுடன் வேனுமென்றாலும் மோதலாம், இது சேவல்களின் உடல் திறன் மற்றும் வீரியத்தை பொறுத்ததே அமையும். இவ்வாறு அதிகம் களம் கண்ட சேவல்களை தேர்ந்தெடுத்து கோழிகளுக்கு போடுவார்கள், அதன் குஞ்சுகளை அடுத்த வருட கட்டிற்கு தயார் செய்வார்கள்.

எதிரிக்கு எதிர் 



சேவல் கட்டில்  பயன்படுத்தப்படும் கத்தி


பூலாம்வலசு கட்டு 

வேகம் குறையாத செவலை 

மதுரையை போலவே கரூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்வலசு என்ற இடத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி நடக்கும் கட்டில் பல ஆயிரம் சேவல்கள் இடம் பெரும். 2014 இல் நடைபெற்ற சேவல்கட்டில் இருவர் கத்தி காயப்பட்டு இறந்ததால் உயர்நீதி மன்ற ஆனைப்படி சேவல் கட்டு நிறுத்தப்பட்டது. பின்பு இதை சூதாட்டம் என்றும் அரசு முத்திரை குத்துகிறது, ஆனால் இதில் எந்த ஒரு சூதாட்டமும் இல்லை, வெற்றி பெற்றவருக்கு தோல்வியடைந்த சேவலே பரிசு. வெற்றி ஒன்று தான் அனைவரது இலக்காக இருக்கும், எப்படி ஒரு போர் வீரனுக்கு அழகு களத்தில் சாவதோ அதே போல். ஆனால் சேவல் கட்டு தடையால், சேவல் வளர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இருப்பினும் ஆங்காங்கே கிராமத்து திருவிழாக்களிலும், தோப்புகளிலும், விடுமுறை நாட்களிலும் கட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த பக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் பாலோவ் (Follow) செய்யவும். மேலும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

  

Comments

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள்ளை நிற குருவிகளுக்கு நோ

ஒய்யார மயில்

  கலப்பின(ண )ங்கள்  எந்த காலகட்டத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது போல மாற்றம் அனைத்திலும் உண்டு: நம் சேவல்களில் அதிகம் உண்டு  இந்த மாற்றத்திர்கான தேடல் நம் நாட்டு இனங்களின் அழிவு, எதற்கு இந்த தேடல் ஆசையே அனைத்துக்கும் காரணம். நம் சேவல்களில் பல இனங்கள் உண்டு அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப்பண்பை பெற்றிருக்கும் இத்தகைய பண்புகள் கலப்பினங்களால் அழிந்துவிடுகின்றது. உதாரணமாக ஆந்திர மாநில சேவல்களின் கிளி மற்றும் குட்டை மூக்கு நம் இனங்களுக்கும இல்லை இவை நம்முடன் கலப்பினம் செய்யப்படும்போது உயரத்தை இழந்துவிடுகிறது மேலும் குஞ்சு பொரிக்கும் தன்மையும் குறைகிறது. சேவல்கள் இயற்கையாகவே 12 முதல் 15 குஞ்சுகள் வரை பொரிக்கும் தன்மை கொண்டது, ஆனால்  தற்போது 4 இல்லை 5. மேலும் நம் இனங்கள் நம் சூழலுக்கும் ஏற்ப தகவமைப்பை கொண்டவை கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் வாழும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது கட்டுத்தரையில் காற்றாடியும், மழைக்கு மருந்து டானிக்கும் தான் தேவையாக இருக்கிறது. நம் இனங்களில் உள்ள பெருவெட்டு நமக்கே உரித்தான ஒன்று அது எந்த மாநில சேவல்களுக்கும் இல்லை, ஆனால் தற்போதைய சூ

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Old lin