Skip to main content

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி 


கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால் கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி. இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன.

கருஞ்சதை கோழி 

கருஞ்சதை சேவல் 

உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள்ளை நிற குருவிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் குறைவு. பொதுவாக வெள்ளை நிற பறவைகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் (காரணம் நிறமி குறைப்பது) அதனால் தான் இதன் விலைகளோ இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கிறது. 
 வெள்ளை நிற சேவல்  

நம் முன்னோர்கள் இதை நன்கு அறிந்தவர்கள் அதனால் தான் அவர்கள் வெள்ளை நிற கோழிகளை வளர்க்கவில்லை, அதனை சாப்பிட்டால் சத்து குறைபாடு வரும் என்பதால் தான் கோயில்களில் கருப்பு நிற கோழி மற்றும் ஆடுகளை பலிகொடுத்து, விருந்தினருக்கு உணவளித்தனர். ஆனால் நாம் இப்போது வெள்ளை நிற கறிக்கோழிகளை (பிராய்லர்) உண்டு ஏகப்பட்ட வியாதிகளை அனுபவித்து கொண்டிருக்கிறோம். நிறங்களில் நம்பர் ஒன் கருப்பு நிறம் தான், இந்த கருப்பு நிறம் அதன் வீரியத்தை குறிக்கும். இனியாவது வெள்ளை நிறத்தை தலையில் தூக்கி வைக்காமல் கருப்பு நிறம் கலந்த வீரியமான சேவல், கோழிகளை வளர்க்கலாமே. மேலும் நம் நாட்டு இனமான கருஞ்சதை கோழி, சேவல்களை அழியாமல் பாதுகாக்கும் சங்ககிரி வாழ் மக்களுக்கு எங்கள்  உள்ளங்கனிந்த நன்றிகள்.

Comments

Popular posts from this blog

வீட்டுக்கு ஒரு சேவல்

வால் சேவல்கள் அழிந்து வருவது சுடும் உண்மை இந்த நூற்றாண்டில் சேவல்கள் செல்லப்பிராணியாக பலர் வீடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது, இதை தொழில்ரீதியாக்கி பல குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சேவல்கள்களின் முரட்டுத்தனம் மூர்க்கத்தனத்தை மையமாகவைத்து வளத்துவந்த சேவல் வளர்ப்பு காலப்போக்கில் மறைந்து, அழகுக்காக மட்டுமே தற்போது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் சேவல்வளர்ப்பாளர்கள் பெரும் பொறுப்பை நோக்கியே நடை போடுகின்ற்னர் .                           சேவல்வளர்ப்பு என்பது ஒரு கலை நம் பண்பாடுடனும், பாரம்பரியத்துடனும் கலைந்தது, அதுனால்தான் இன்னும் அந்த கலை நம் கிராமங்களில் அழிவதில்லை. சேவல் வளர்ப்பாளர்களுக்கு எப்போதும் கடும் சோதனைகள் தான், செல்லப்பிராணிகள் மீது வைக்கும் அன்பை சமுதாயமும் சுற்றமும் குறைகூறிகொன்டேயிருக்கும், செல்லப்பிராணிகளாக நாய்களை ஏற்றுக்கொண்ட சமுதாயம் சேவல்களை ஏற்க ஏனோ இவ்வளவு தாமதம். இதில் படித்தவர்கள் ஈடுபட்டால் இந்த சமூகத்தின் பார்வையே வேறு.  சேவல்களை வளர்ப்பதை மக்கள் வே...

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Ol...