கட்டுத்தரை
கட்டுத்தரை வழக்கமாக சேவல்களை பராமரிக்க கட்டப்படும் தளமாகும். ஒவ்வொரு சேவல் வளர்ப்பாளர்கள் வீட்டிலும் குறைந்தது ஒரு கட்டுத்தரையையாவது பார்க்கலாம். கூண்டு முறை பராமரிப்பை விட கட்டுத்தரை பராமரிப்பே சிறந்தது. இத்தகைய வளர்ப்பு நேரடி கண்காணிப்பில் இருக்கும், மேலும் வால்சேவல்களுக்கு கூடுதல் பராமரிப்பாக இருக்கும்.
கட்டுத்தரை பொதுவாக உலர்ந்த மண் தரையை குறிக்கும், இதன் அளவு குறைந்தது இரண்டுக்கு இரண்டு மீட்டர் இருக்கும். நடுவில் சேவல் கயிறு கட்ட U வளைவு கம்பியோ அல்லது கட்டையிலோ நடுவப்பட்டிருக்கும். மண் தரை சேவல்களுக்கு இதமான அழுத்தத்தையும் மற்றும் கால் புற்றில் இருந்து தவிர்க்க வாய்ப்பாக அமையும்.
பெரும்பாலும் நாம் கிராமத்தில் மந்தையில் புளிய மரத்தின் அடியிலோ அல்லது வேப்பமரத்தின் அடியிலோ கட்டு தரையில் சேவல்கள் கட்டியிருப்பதை பார்த்திரிப்போம். இவ்வாறு மர நிழலில் கட்டு தரை அமைவதால் சேவல்கள் சரியான தட்பவெப்ப சூழலில் நல்ல மேனியாகவும் அனைவரும் கண்ணையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.
Comments
Post a Comment