Skip to main content

கோழிக்கு கொரோனாவா!!!


கோழிக்கறி சாப்பிட்டா கொரோனா கம்மிங் ஆஆ.....


சமீப காலமாக கோழிக்கறி உண்டால் கொரோனா வருவதாக மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் தான் வீட்டில் வளர்க்கும் சேவல்களுக்கு கொரோனா வைரஸ் வந்துவிடுமோ என பயத்தில் கிடைக்கும் விலைக்கு விற்கின்றனர். பல ஆண்டுகள் வளர்ப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. 

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமே தாக்கும், மாறாக பறவைகளை தாக்குவதில்லை. இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சிகளும் அப்பிடி கண்டறியவில்லை. கடந்த மூன்று மாதங்களாக கிளிமூக்கு சேவல்கள் விற்பனை குறைவுதான், கழிச்சலில் பல சேவல்களை விட்டுவிட்டனர், விலையும் படுத்துவிட்டது. தற்போது கொரோன பீதியும் பரவுகிறது. 

\

நல்ல சேவல்களை தேர்வுசெய்யும் வளர்ப்பாளர்களே, இந்த கோடைக்கு பின் தான் நல்ல விலைக்கு சேவல்கள் விற்பனையாகும். உற்பத்தியும் இப்பொழுதுதான் அதிகம், வரும் வெயிலின் தாக்கத்திலிருந்தும், குஞ்சுகளை அம்மையிலிருந்து காக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள்ளை நிற குருவிகளுக்கு நோ

ஒய்யார மயில்

  கலப்பின(ண )ங்கள்  எந்த காலகட்டத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது போல மாற்றம் அனைத்திலும் உண்டு: நம் சேவல்களில் அதிகம் உண்டு  இந்த மாற்றத்திர்கான தேடல் நம் நாட்டு இனங்களின் அழிவு, எதற்கு இந்த தேடல் ஆசையே அனைத்துக்கும் காரணம். நம் சேவல்களில் பல இனங்கள் உண்டு அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப்பண்பை பெற்றிருக்கும் இத்தகைய பண்புகள் கலப்பினங்களால் அழிந்துவிடுகின்றது. உதாரணமாக ஆந்திர மாநில சேவல்களின் கிளி மற்றும் குட்டை மூக்கு நம் இனங்களுக்கும இல்லை இவை நம்முடன் கலப்பினம் செய்யப்படும்போது உயரத்தை இழந்துவிடுகிறது மேலும் குஞ்சு பொரிக்கும் தன்மையும் குறைகிறது. சேவல்கள் இயற்கையாகவே 12 முதல் 15 குஞ்சுகள் வரை பொரிக்கும் தன்மை கொண்டது, ஆனால்  தற்போது 4 இல்லை 5. மேலும் நம் இனங்கள் நம் சூழலுக்கும் ஏற்ப தகவமைப்பை கொண்டவை கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் வாழும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது கட்டுத்தரையில் காற்றாடியும், மழைக்கு மருந்து டானிக்கும் தான் தேவையாக இருக்கிறது. நம் இனங்களில் உள்ள பெருவெட்டு நமக்கே உரித்தான ஒன்று அது எந்த மாநில சேவல்களுக்கும் இல்லை, ஆனால் தற்போதைய சூ

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Old lin