Skip to main content

சரித்திர நாயகன்


கோபமும், பாசமும்

விட்டுக்குடுக்கும் மனப்பான்மை மனிதனுக்கே உரிமையென நாம் நினக்கிறோம், அதை விட அப்பாற்பட்டவை சேவல்கள். கோபமும், பாசமும் தனக்கே உரியதாய் கொண்டவை. சேவல்களுக்கு ஒரு பெட்டையிடன் வாழ்வு என்ற கோட்பாடு இல்லை. ஆனால் தன் வாழ்வில் துணைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும்.       
சேவல்கள் பெட்டையுடன் திரியும் பொழுதுகளில், அவற்றை கவனமாக பாத்துக்கொள்ளும். அச்சமயங்களில் அதிக இரை எடுத்துக்கொள்ளது. எந்த ஒரு இரையை கண்டாலும் தன் பெட்டைக்கு காட்டி கொடுக்குமே தவிர அது உண்ணாது. முட்டை ஈனும் பொழுதுகளில் பெட்டை முட்டையிடுவதர்க்கான இடங்களை அதுவே அமைத்து அதனை சோதித்துக்கொடுக்கும்.

கோழி முட்டையிடும் பொழுதில் இவை மிகவும் ஆண்மையோடும் வீரத்தோடும் காணப்படும். அதுவரை பெரிய சேவல்களுக்கு பயந்து வாழ்ந்த சேவல்கள் அவற்றையே எதிர்க்கும். சில சேவல்கள் ஆட்களையே அடிக்கும் இவை ஆலடி சேவல்கள் என்று அழைக்கப்படும். இவ்வாறு தன் பெட்டையை காக்கும் நோக்கில் செயல்படும். கோழிகள் அடையில் இருக்கும் பொழுதுகளில் (21 நாட்கள்) சேவல்கள் சரியாக இரை எடுக்காது, வேகம் குறைந்து காணப்படும். கோழியை பிரிந்த சேவல்கள் இறந்த கதையும் இங்கு உண்டு. குஞ்சுகள் பெரியதாகும் வரை சேவல்கள் கோழியை அண்டாது, தானும் இரை குடுத்து குஞ்சுகளை வளர்க்கும். புழு பூச்சிகளை கொத்திக்கொண்டு அடையில் இருக்கும் கோழிக்கு இரை கொண்டு குடுக்கும். குஞ்சு ஈன்ற தாய் இறக்கும் பட்சத்தில், குஞ்சுகளை தாய் போல் வளர்த்த சேவல்களும் நான் பார்த்துள்ளேன். மேலும் கோழி குஞ்சுகளை கூட்டிக்கொண்டு திரிகையில், காக்கையோ, பருந்தோ, பூனையோ நெருங்கினால், சத்தம் கொடுத்து அவற்றை எச்சரிக்கை செய்யும். சேவல்களின் ஒவ்வொரு சத்தத்திற்க்கும் ஒரு அர்த்தம் உண்டு.   

Comments

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள...

வீட்டுக்கு ஒரு சேவல்

வால் சேவல்கள் அழிந்து வருவது சுடும் உண்மை இந்த நூற்றாண்டில் சேவல்கள் செல்லப்பிராணியாக பலர் வீடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது, இதை தொழில்ரீதியாக்கி பல குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சேவல்கள்களின் முரட்டுத்தனம் மூர்க்கத்தனத்தை மையமாகவைத்து வளத்துவந்த சேவல் வளர்ப்பு காலப்போக்கில் மறைந்து, அழகுக்காக மட்டுமே தற்போது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் சேவல்வளர்ப்பாளர்கள் பெரும் பொறுப்பை நோக்கியே நடை போடுகின்ற்னர் .                           சேவல்வளர்ப்பு என்பது ஒரு கலை நம் பண்பாடுடனும், பாரம்பரியத்துடனும் கலைந்தது, அதுனால்தான் இன்னும் அந்த கலை நம் கிராமங்களில் அழிவதில்லை. சேவல் வளர்ப்பாளர்களுக்கு எப்போதும் கடும் சோதனைகள் தான், செல்லப்பிராணிகள் மீது வைக்கும் அன்பை சமுதாயமும் சுற்றமும் குறைகூறிகொன்டேயிருக்கும், செல்லப்பிராணிகளாக நாய்களை ஏற்றுக்கொண்ட சமுதாயம் சேவல்களை ஏற்க ஏனோ இவ்வளவு தாமதம். இதில் படித்தவர்கள் ஈடுபட்டால் இந்த சமூகத்தின் பார்வையே வேறு.  சேவல்களை வளர்ப்பதை மக்கள் வே...

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Ol...