Skip to main content
சேவல்கள் பற்றி உமக்கென்ன தெரியும்?

இக்கேள்வியை நம்மில் சிலரிடம் கேட்டால் "காலையில் கூவும்", "ஆண் கோழி சிவப்பு நிறத்தில் கொண்டையுடன் கிராமத்தில் பார்த்திருக்கறேன்" இது தான் பதிலாய் கிடைக்கும். முருக பக்தியில் முத்திப்போனவர்கள் கொடியில் கூவியதை கூறுவார்.

"இதுதான் உலகின் மிகப்பழமையான விளையாட்டின் விதை என எத்தனைபேர் அறிவர்"? தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டு "சாவல் கட்டு" பலரின் குல கௌரவங்களையும், பல கொடூர உண்மைகளையும் கொண்டதென "ஆடுகளம்" படத்தின் அரைபகுதியில் காட்டினர். இது மட்டும்தானா ஊரின் பெருசுகளும், புல்லட்டு  பாண்டிகளும், விடலை பெண்களும் சகட்டுமேனிக்கு சாவல் பிரியரயிருப்பர். ஆம் நானும் அப்படி ஒரு சேவல் பிரியன் தான்!!!


என் பெயர் சேட்டன் பிரசன்னா நான் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளன் மற்றும் ஆர்வலன். எனக்கு சிறு வயதில் இருந்தே விலங்குகள் மீது பெரியளவு ஆர்வம், குறிப்பாக சேவல்கள். என் தெருக்களில் சேவல் சண்டை விடுவதும் காவலரை கண்டு பயந்து ஓடுவதையும் பார்த்த நியாபகம். இதை கண்ட நானும் வண்ண கோழிக்குஞ்சுகளை வாங்கி என் வயது சிறுவர்களுடன் காட்டி இது தான்  சண்டை கோழி என்று மார்தட்டியிருக்கிறேன் .

பள்ளி செல்லும் வழியில் சேவல்கள் குப்பைகளை கிளறும் அழகை ரசிப்பது, விடுமுறை நாட்களில் சந்தைக்கு சென்று சேவல்களின் விலையை விசாரிப்பது. இவ்வாறுதான் எனது பள்ளி நாட்களின் விடுமுறை பொழுதுகளை கழிப்பேன். சற்று மேல்வகுப்புகளுக்கு சென்ற பின் விடுமுறை நாட்களை வேலை செய்து அந்த பணத்தில் சேவல்கள் வாங்கி வளர்த்தேன், ஆனால் என் அதிஷ்டம் அவை நோய் வாய்பட்டு இறந்துவிடும் அல்லது நோயுற்ற சேவல்களை வாங்கி ஏமாந்து
நாட்டு சேவல்களையே வளர்த்துவந்த எனக்கு சாதி சேவல்கள் வளர்க்க வேண்டும் என்பதில் முழு கவனமும் இருந்தது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் சாதி சேவல்களின்  விலை 5000 முதல் 6000 இருக்கும். பின்பு கடைசியாக ஒருவரை சந்தித்து 1600 குடுத்து இரண்டு குஞ்சுகள் வாங்கினேன். அதை சண்டைக்கு பயிற்சி என்ற பெயரில் பாடாய் படித்தினேன். இறுதியாக அது சேவலாய் வளர்ந்து நின்றது, அதை விற்க முயன்றேன் யாரும் வாங்க வரவில்லை.

ஒரு நாள் என் வீடு தேடி ஒருவர் வந்து யாருப்பா இங்க சேவல் வளர்க்குறது, விலைக்கு குடுப்பியானு கேட்டாரு. எனக்கோ ஒரே மகிழ்ச்சி நான் வளர்த்த சேவல் விலைக்கு போகபோகிறது என்று, அவர் சேவலை தூக்கி பார்த்து இரண்டும் 800 ரூபாய்க்கு குடு என்றார். நான் அதிர்ந்தேன் இதற்கு விலை 2000 என்றேன், சரிதான் போ நீயே வச்சுக்கோ என்றார். அப்போது தான் தெரியும் நான் வளர்த்தது நாட்டுகோழி இனத்தில் சற்று பெரியவை என்று. அந்த ஏமாற்றம் என்னை பெரிதும் பாதித்தது.மேலும் இரு முறை இதேபோல்  இருமுறை ஏமாற்றத்தயே  சந்தித்தேன்.
 ஆனால் இந்த ஏமாற்றத்தில் ஒரு அறிமுகம் எனக்கு கிடைத்தது, அந்த அறிமுகம் தான்  என்னை சேவல் வளர்ப்பில்  முழுமையாக ஈடுபட வைத்தது.

ஆம் அந்த அறிமுகம் தான் சேவல் சரவணன். சிறுவயதில் இருந்தே இவரை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், தினமும் மாடியில் சென்று இவர் சேவல்களுக்கு இரை கொடுப்பதை பார்திருகிக்கிறேன், பெரிய பெரிய சேவல்களை தூக்கிக்கொண்டு மீசைவைத்த பெருசுகளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.எனக்கு சேவல் வளரிப்பில் ஆர்வம் வந்ததற்கு இவரும்  ஒரு முக்கிய காரணம்.
சேவல் சரவணன் 
இவர் சேவல் வளர்பில் 35 ஆண்டுகளாக ஈடுபடுகிறார். ஒரே மாதிரியான இனவழி சேவல்களை வளர்த்து இனம் மாற உற்பத்தில் இவர் தேர்ச்சி பெற்றவர். இவருடைய அறிமுகம் கிடைத்து 8 ஆண்டுகளுக்கு பின் நானும் சேவல் வளர்பில் கைதேர்ந்து விட்டேன். எங்களுகென்று ஒரு வளர்ப்பு முறையையும்,உணவுமுறையும் மற்றும் மருத்துவத்தையும் நாங்களே செய்துகொள்வோம். நான் இப்போது அவருடன் இணைந்து இதை தொழிலாகவே செய்கிறோம், நல்ல லாபமும் கிடைகிறது. சேவல்களை வளர்ப்பதிலும் அதனை பாதுகாப்பதிலும் அதிக அக்கறையும் ஆர்வமும் உண்டு. அதற்கு ஏற்ற பலனும் அதிக லாபமும் கிடைகிறது.

கம்பீரமான பொன் நூலான் 

உதிந்த சேவல் வாலுடலன்நான் நான்கு வருடங்களுக்கு முன்பு 
 எங்களிடம் குஞ்சுககளை வாங்கி வளர்பவர்களுக்கு எங்கள் வளர்ப்பு முறைகளும் உணவுமுறைகளும் கற்றுக்கொடுப்போம். அழகு சேவல்களும், சண்டை சேவல்களும் அதன் தன்மை மாறா வளர்ப்பை பின்பற்றுகிறோம். வால்சேவல்கள் வளர்ப்பதில் மிகுந்த கவனத்தையும் பின்பற்றுவோம், ஆம் அவற்றின் வால்களின் அளவு 1 மீட்டர் முதல் 1.50 மீட்டர் வரை வளரும்.


Comments

  1. உங்கள்
    பதிவு சிறப்பாக உள்ளது
    நானும் இந்த ரக சேவல்களை வளர்க்க ஆசை
    தொடர்பு கொள்ள முகவரி அனுப்புங்கள்
    நான் வேலூர் மாவட்டம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள...

வீட்டுக்கு ஒரு சேவல்

வால் சேவல்கள் அழிந்து வருவது சுடும் உண்மை இந்த நூற்றாண்டில் சேவல்கள் செல்லப்பிராணியாக பலர் வீடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது, இதை தொழில்ரீதியாக்கி பல குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சேவல்கள்களின் முரட்டுத்தனம் மூர்க்கத்தனத்தை மையமாகவைத்து வளத்துவந்த சேவல் வளர்ப்பு காலப்போக்கில் மறைந்து, அழகுக்காக மட்டுமே தற்போது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் சேவல்வளர்ப்பாளர்கள் பெரும் பொறுப்பை நோக்கியே நடை போடுகின்ற்னர் .                           சேவல்வளர்ப்பு என்பது ஒரு கலை நம் பண்பாடுடனும், பாரம்பரியத்துடனும் கலைந்தது, அதுனால்தான் இன்னும் அந்த கலை நம் கிராமங்களில் அழிவதில்லை. சேவல் வளர்ப்பாளர்களுக்கு எப்போதும் கடும் சோதனைகள் தான், செல்லப்பிராணிகள் மீது வைக்கும் அன்பை சமுதாயமும் சுற்றமும் குறைகூறிகொன்டேயிருக்கும், செல்லப்பிராணிகளாக நாய்களை ஏற்றுக்கொண்ட சமுதாயம் சேவல்களை ஏற்க ஏனோ இவ்வளவு தாமதம். இதில் படித்தவர்கள் ஈடுபட்டால் இந்த சமூகத்தின் பார்வையே வேறு.  சேவல்களை வளர்ப்பதை மக்கள் வே...

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Ol...