Skip to main content

Posts

Showing posts from October, 2018

திருவிழாக்கட்டு

பெருவெடை சேவல்கள்  (கட்டு சேவல்கள்) இவ்வகையான சேவல்கள் நல்ல திடகார்த்தமான உடல் கட்டும் 4 முதல் 8 கிலோ வரையிலான எடை கொண்டவை. இவற்றின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா. பெருவெட்டு சேவல்கள் பெரும்பாலும் கட்டிற்கு தான் பயன்படுத்தப்படும், இவற்றின் பின்னங்காலில் கூர்மையான கத்தியை ஒன்றை கட்டி சண்டைக்கு விடுவார்கள். அனைத்து வகையான சேவல்களையும் கட்டிற்கு பயன்படுத்தலாம் ஆனால் இவ்வகை பெருவெட்டு சேவல்கள் கொஞ்சம் சிறப்பானவை. இவைகள் மூர்கத்தனமாகவும், தன் பலத்தை நிரூபிக்க சாகும் வரை சண்டையிடும் மேலும் தன் பலத்தையும், வீரத்தையும் கணக்கிட்டு அதற்க்கு ஏற்றாற்போல் சண்டையிடும் நுணுக்கம் தெரிந்தவை. அதனால் தான் இவை தமிழனின் பாரம்பரியமாக இருந்தது. ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு சேவல், அவற்றின் கூவல் ஒலி தான் காலை அலாரம். வருடம் முழுதும் மணல் கட்டில் இருக்கும், வருடம் ஒரு முறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் கட்டப்படும். குறிப்பாக சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையில் இதன் சிறப்பு ஒரு படி மேல்.

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Old lin

தகர்க்கும் தமிழர்கள்

ஆந்திராவை உடைக்கும் தமிழர்கள்  சேவல்கள் தமிழ்நாட்டிற்கு   மட்டும் உரிமை கூற முடியாது, இவை உலகம் எங்கும் பரவலாக பெயர்போனவை. நமக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் இவை அதிகம், அங்கு சேவல் கட்டிற்கு தடைகள் கிடையாது.  அவ்வாறான ஆந்திர மக்கள் பெரிதும் விரும்புவது நம் தமிழ்நாட்டு சேவல்களே. வாரம் வாரம் நம்ம ஊரு சந்தையை அலசி கிடைக்கிற பொருள தூக்கிட்டு போவாங்கே. அதுக்காக அந்த ஊருல நல்ல சேவல்கள் இல்லேனு அர்த்தம் இல்ல, நம்ம ஊரு சேவல்களின் தரம், உயரம், மூர்க்கம், நிறம், வளர்ப்பு, இதுனால ஈர்க்கப்பட்டு வாங்கிட்டு போறாங்க. இவங்க இப்பிடி ஒரு பக்கம் இருக்கும் போது நம்ம கிளி மூக்கு வால்சேவல் வளர்கிற ஒரு சில மக்கள் ஆந்திர சேவல்களை இங்க கொண்டுவந்து குஞ்சு இறக்கி இது என் லைனேஜ் (Linage) னு சொல்லி மக்களை ஏமாத்திட்ருக்கங்கே. இது ஒன்னும் தப்பு இல்லையேனு நீங்க கேக்கலாம். தப்பு இல்ல ஆனா என்ன நம்ம நாட்டு இனங்களை அழிச்சுருவாங்க. ஜல்லிக்கட்டு பஞ்சாயத்துக்கு அப்பறம் தான் நாட்டு இனங்கள பாதுகாக்கணும்னு  நம்ம மக்கள் கிளம்பிருக்காங்க  ஆனா இப்பிடி வேற மாநிலத்து இனங்கள  கொண்டு வந்து நம்மளோட தனித்தன்மையை கெடுக