கை மிதி இது வழக்கமான உற்பத்திமுறை அல்ல, சேவல்கள் பருவத்தில் உள்ள கோழிகளை தேடி , ஓடி, பின்பு அணையும் இனப்பெருக்க முறையே இயற்க்கையானது. தொன்று தொட்டு இவ்வகையே குஞ்சு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாற்றாக நல்ல பழகிய சேவல்களை கோழியை கையால் பிடித்து அணையவிடுவது கை மிதி ஆகும். இவ்வாறு செய்வதில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. வால் சேவல்களின் அழகு கலையா வண்ணம் பாதுகாக்கலாம், பொதுவாக சேவல்களை கோழிகளை அணையும் பொது வால் பகுதி முற்றும் உடையும் பின், அடுத்த குருத்தில் தழைத்து பின் உருவாகும். கை மிதி மூலம் இதனை குறைக்கலாம். பொதுவாக கோழியை அணையும் சேவல்களை இரை எடுக்காது, மிகவும் சோர்வாக மெலிந்தே காணப்படும், கோழி அடைக்கு படுத்த பின்னே பழைய நிலைமைக்கு திரும்பும். கை மிதியின் மூலம் சேவல்களின் உடல் எடை குறையா வண்ணம் பாதுகாக்கலாம். தொடர்ந்து கை மிதியில் பெருக்கம் செய்யும் சேவல்களை சீக்கிரம் உலண்டு விடும். மேலும் வேகமாக முதிர்ச்சி நிலையை அடையும். ஆகவே விற்பனைக்கு அல்லது கண்காட்சிக்கு தயார்நிலையில் வால் அழியாவண்ணம் இருக்க கை மிதியை உபயோகிக்கலாம், தவிர மற்ற நேரங்களில் சேவல்கள...
சேவல்கள் வீரத்தின் வித்தாய், வளர்ப்பிற்கு பிள்ளையாய், தமிழனின் அடையாளமாய் வாழ்ந்தவை. பிறர் கெளரவம் காக்க தன்னையே அர்பனித்தவை. அறிவோம் அவை(வர்)களை.