Skip to main content

Posts

Showing posts from 2023

கை மிதி

கை மிதி இது வழக்கமான உற்பத்திமுறை அல்ல, சேவல்கள்  பருவத்தில் உள்ள கோழிகளை தேடி , ஓடி, பின்பு அணையும் இனப்பெருக்க முறையே இயற்க்கையானது. தொன்று தொட்டு இவ்வகையே குஞ்சு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாற்றாக நல்ல பழகிய சேவல்களை கோழியை கையால் பிடித்து அணையவிடுவது கை மிதி ஆகும். இவ்வாறு செய்வதில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. வால் சேவல்களின் அழகு கலையா வண்ணம் பாதுகாக்கலாம், பொதுவாக சேவல்களை கோழிகளை அணையும் பொது வால் பகுதி முற்றும் உடையும் பின், அடுத்த குருத்தில் தழைத்து பின் உருவாகும். கை மிதி மூலம் இதனை குறைக்கலாம். பொதுவாக கோழியை அணையும் சேவல்களை இரை எடுக்காது, மிகவும் சோர்வாக மெலிந்தே காணப்படும், கோழி அடைக்கு படுத்த பின்னே பழைய நிலைமைக்கு திரும்பும். கை மிதியின் மூலம் சேவல்களின் உடல் எடை குறையா வண்ணம் பாதுகாக்கலாம்.  தொடர்ந்து கை மிதியில் பெருக்கம் செய்யும் சேவல்களை சீக்கிரம் உலண்டு விடும். மேலும் வேகமாக முதிர்ச்சி நிலையை அடையும்.  ஆகவே விற்பனைக்கு அல்லது கண்காட்சிக்கு தயார்நிலையில் வால் அழியாவண்ணம் இருக்க கை மிதியை உபயோகிக்கலாம், தவிர மற்ற நேரங்களில் சேவல்களை கோழியுடன் சே

கட்டுத்தரை காவல்

கட்டுத்தரை   கட்டுத்தரை வழக்கமாக சேவல்களை பராமரிக்க கட்டப்படும் தளமாகும். ஒவ்வொரு சேவல் வளர்ப்பாளர்கள் வீட்டிலும் குறைந்தது ஒரு கட்டுத்தரையையாவது பார்க்கலாம். கூண்டு முறை பராமரிப்பை விட கட்டுத்தரை பராமரிப்பே சிறந்தது. இத்தகைய வளர்ப்பு நேரடி கண்காணிப்பில் இருக்கும், மேலும் வால்சேவல்களுக்கு கூடுதல் பராமரிப்பாக இருக்கும்.  கட்டுத்தரை பொதுவாக உலர்ந்த மண் தரையை குறிக்கும், இதன் அளவு குறைந்தது இரண்டுக்கு இரண்டு மீட்டர் இருக்கும். நடுவில் சேவல் கயிறு கட்ட U வளைவு கம்பியோ அல்லது கட்டையிலோ நடுவப்பட்டிருக்கும். மண் தரை சேவல்களுக்கு இதமான அழுத்தத்தையும் மற்றும் கால் புற்றில் இருந்து தவிர்க்க வாய்ப்பாக அமையும்.  பெரும்பாலும் நாம் கிராமத்தில் மந்தையில் புளிய மரத்தின் அடியிலோ அல்லது வேப்பமரத்தின் அடியிலோ கட்டு தரையில் சேவல்கள் கட்டியிருப்பதை பார்த்திரிப்போம். இவ்வாறு மர நிழலில் கட்டு தரை அமைவதால் சேவல்கள் சரியான தட்பவெப்ப சூழலில் நல்ல மேனியாகவும் அனைவரும் கண்ணையும்  ஈர்க்கும் வண்ணம் இருக்கும். 

வெள்ளை ஹீரோ

வெள்ளைக்கு மவுசு  எப்பிடி ஒரு சூப்பர் ஹீரோக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவு வெள்ளை நிற சேவல் கோழிகளுக்கு வரவேற்பிருக்கிறது. வெள்ளை நிற பட்டாக்களுக்கு மார்க்கெட்டில் தனி விலை தான். வெள்ளை நிறத்தில் முழு நீள டெம்பர் வாலில் சேவல்கள் அமைந்தால், அதற்க்கு தணிவிலை தான்.  வெள்ளை நிற சேவல்களை தங்கள் கட்டுத்தரைகளில் கட்டி அழகு பார்ப்பது அனைவரின் கனவாகத்தான் இருக்கிறது. இந்நிற சேவல்கள் கொஞ்சம் அரிதுதான், அதனால் தான் என்னவோ மவுசுக்கு பஞ்சம் இல்லை.