Skip to main content

Posts

Showing posts from 2020

கோழிக்கு கொரோனாவா!!!

கோழிக்கறி சாப்பிட்டா கொரோனா கம்மிங் ஆஆ..... சமீப காலமாக கோழிக்கறி உண்டால் கொரோனா வருவதாக மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் தான் வீட்டில் வளர்க்கும் சேவல்களுக்கு கொரோனா வைரஸ் வந்துவிடுமோ என பயத்தில் கிடைக்கும் விலைக்கு விற்கின்றனர். பல ஆண்டுகள் வளர்ப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.  கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமே தாக்கும், மாறாக பறவைகளை தாக்குவதில்லை. இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சிகளும் அப்பிடி கண்டறியவில்லை. கடந்த மூன்று மாதங்களாக கிளிமூக்கு சேவல்கள் விற்பனை குறைவுதான், கழிச்சலில் பல சேவல்களை விட்டுவிட்டனர், விலையும் படுத்துவிட்டது. தற்போது கொரோன பீதியும் பரவுகிறது.  \ நல்ல சேவல்களை தேர்வுசெய்யும் வளர்ப்பாளர்களே, இந்த கோடைக்கு பின் தான் நல்ல விலைக்கு சேவல்கள் விற்பனையாகும். உற்பத்தியும் இப்பொழுதுதான் அதிகம், வரும் வெயிலின் தாக்கத்திலிருந்தும், குஞ்சுகளை அம்மையிலிருந்து காக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுங்கள்.