Skip to main content

Posts

Showing posts from 2014

வீழ்ந்த வால்

வரலாறாய் போன வால்சேவல்கள்!!                          வால்சேவல்கள் முன்னொருகாலத்தில் எங்கும் பரவி இருந்தது, அதன் அழகும் மிடுக்கும் தோற்றமும் காண்போரை  கவரும் வண்ணம் இருக்கும். அதன் அழகு மயிலையே பொறாமைப்படும் அளவில் இருந்தது. அத்ததகைய வால்சேவல் இனங்களின் பெரும் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. அவைகளும் நம்மால் காக்கப்பட வேண்டிய இனங்களில் ஒன்று. முதலில் சேவல்களை கடவுளாய் கண்ட மனிதன் பிறகு அவற்றை கடவுளின் பெயரால் அழிக்க ஆரம்பித்தான். இவ்வாராக ஒரு பாதி அழிய சூழ்நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப காரணிகளால் மீதமும்  அழிவை நோக்கி பயணித்தது. இப்போது இருக்கும் இளைஞர் கூட்டம், பழமையை நோக்கும் வண்ணம் இவ்வகை இனங்களை இனக்கண்டு வளர்கின்றனர், இருந்தும் என்னபயன் அழிந்ததோ ஆயிரக்கணிக்கில் ஆயிற்றே. இன்னும் இவ்வகை சேவல்கள் எட்டாக்கனியாய் தான் உள்ளன. 2 முதல் 3 மீட்டர் வால் நீளம் கொண்ட சேவல் இனங்கள் இப்பொழுது 1/2 அடி 1 அடி வாலாக உருவெடுத்துள்ளது. சேவல் வளர்ப்போர் எங்கு தேடும் பழமையான சேவல் கிடைப்பது இல்லை, அவ்வாறே எங்கும் இருந்தால் அதன் விலையோ 60,000 முதல் 80,000 வரை.              சேவல் வளர்ப்

பார்வைக்கு

நீண்ட இடைவேளைக்கு பிறகு... வால் நீள செவலை பட்டா  பூ தட்டிய செவலை  பெருவெட்டு மயில் குஞ்சு வால் நீள நூலன் பட்டா\  67 இன்ச்  உயர பூதி பட்டா 

சரித்திர நாயகன்

கோபமும், பாசமும் விட்டுக்குடுக்கும் மனப்பான்மை மனிதனுக்கே உரிமையென நாம் நினக்கிறோம் , அதை விட அப்பாற்பட்டவை சேவல்கள் . கோபமும், பாசமும் தனக்கே உரியதாய் கொண்டவை. சேவல்களுக்கு ஒரு பெட்டையிடன் வாழ்வு என்ற கோட்பாடு இல்லை. ஆனால் தன் வாழ்வில் து ணைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும்.        சேவல்கள் பெட்டையுடன் திரியும் பொழுதுகளில் , அவற்றை கவனமாக பாத்துக்கொள்ளும் . அச்சமயங்களில் அதிக இரை எடுத்துக்கொள்ளது . எந்த ஒரு இரையை கண்டாலும் தன் பெட்டைக்கு காட்டி கொடுக்குமே தவிர அது உண்ணாது . முட்டை ஈனும் பொழுதுகளில் பெட்டை முட்டையிடுவதர்க்கான இடங்களை அதுவே அமைத்து அதனை சோதித்துக்கொடுக்கும் . கோழி முட்டையிடும் பொழுதில் இவை மிகவும் ஆண்மையோடும் வீரத்தோடும் காணப்படும் . அதுவரை பெரிய சேவல்களுக்கு பயந்து வாழ்ந்த சேவல்கள் அவற்றையே எதிர்க்கும் . சில சேவல்கள் ஆட்களையே அடிக்கும் இவை ஆலடி சேவல்கள் என்று அழைக்கப்படும் . இவ்வாறு தன் பெட்டையை காக்கும் நோக்கில் செயல்படும் . கோழிகள் அடையில் இருக்கும் பொழுதுகளில் (21 நாட்கள் ) சேவல்

வீட்டு வளர்ப்பு

சேவல் வளரிப்பில் கூண்டு வளர்ப்பு முறை சேவல் வளர்ப்பில் இரண்டு வகைகள் உள்ளன, அவை பண்ணை வளர்ப்பு மற்றும் வீட்டு வளர்ப்பு. இவ்விரு வளர்ப்பிலும், திறந்த வெளி மற்றும் கூண்டு முறை வளர்ப்பே பின்பற்றப்படுகிறது. இந்த இரு வளர்ப்பு முறைகளை பொறுத்தே, அதன் தோற்றமும், உற்பத்தி திறன் மற்றும் பழக்கமுறைகளும் அமைகிறது. திறந்த வெளி வளரிப்பில், அதிக கவனம் தேவையில்லை, உணவுப்பொருள் சிக்கனம் மற்றும் நிரந்தர இடத்தேவையும் இல்லை. ஆனால்  தனி கவனிப்பு  குறைவு, நோய்வாய்ப்படுத்தல் அதிகம் மற்றும் தொற்று வியாதிகள் பாதிப்பும் இருக்கும். சேவல் வளர்ப்பிற்கு கூண்டு வளர்ப்பு முறையே சிறந்தது. இதனால்  சேவல்களின் உற்பத்தி வீரியம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் அழகும் பாதுகாக்கப்படும்.  இவ்வகை வளர்ப்பு  கூண்டு வளர்ப்பு குஞ்சுஈன்ற நூலான் கோழி  முறையை பின்பற்றுவது சிறிது கடினம்தான். ஏனென்றால் இதற்கென தனி கவனம் தேவை. இவ்வாறு கூண்டு வளர்ப்பு முறைக்கு பக்குவப்பட்ட தாய்க்கோழி அதற்கேற்றவாரே, தான் குஞ்சுகளையும் வளர்க்கின்றது. குஞ்சு பொறித்த கோழிகள் தன் குஞ்சுகளை வளர்ப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கும், ஆதலா
நமது முகநூல் மூலம் அறிமுகமான பழனி மாவட்ட நண்பர்   காமாட்சி .. நேற்று மதுரை வந்தார் , எங்களுடைய வீட்டுப்பண்ணையையும் , எங்களது இன சேவல்களையும் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார் . மூன்று   வருடங்களாக இவர் சேவல் வளர்த்து வருகிறார் . நல்ல பெட்டை கோழி   தேடி வந்த இவர் பயணம் ...... மதுரையில் முடிவடைந்தது .  மதுரையில் உள்ள எங்கள் நண்பர்களை அறிமுகம் செய்தோம் . நண்பர்   கள்ளந்திரி செல்லதுரை அவர்களிடம்   நல்ல கோழி ஒன்று  8000   ரூபாய்க்கும் , எங்களிடம்  5000 ரூபாய்க்கு கருப்பு விடைக்கோழி ஒன்றும் வாங்கினார் . முகநூலின் அணுகி   சிலரிடம் ,  முன்பு   ஏமாற்றத்தை அடைந்ததும் கூறினார் . குறைந்த விலையில் நல்ல கோழிகள் கிடைத்ததாக   மகிழ்ச்சியுடன்   தெரிவித்தார் .     இணையத்தளம் மூலமாக , எங்களிடம் அணுகி , மதுரை வந்த நண்பர் காமாட்சியை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி , நன்றி நண்பரே !!!!
 எனது முக நூலின் மூலம் அறிமுகமான நண்பர் காமாட்சி சுந்தரம், கணிபொறி தொழிநுட்பத்தில் பணிபுரியும் இவர் பழனி மாவட்டத்தை சேர்ந்தவர்.. இவரிடம் காக செவளையும், மயில் சேவலையும்  வளர்த்து வருகிறார். இவர் நல்ல கிளிமூக்கில் கோழி ஒன்று தேடிவருகிறார், யாரேனும் விற்கும் எண்ணம் இருந்தால் தெரிவிக்கவும்... நல்ல வால்தர செவலை   10 மாத மயில் பட்டா விற்பனைக்கு   தொடர்புக்கு  காமாட்சி சுந்தரம்   (9994565514) , 

அசில்

அழகு சேவல்கள்  அறத்திலும்,  மறத்திலும்  சிறந்த நம் மக்கள் அழகை ஆராட்டுதளிலும் ஆர்வமிக்க அன்பு பைத்தியங்கள்.  தான் பெற்ற பிள்ளையென பாவித்த பெருசுகள் ஊரில் இன்னும் அழகு சேவலை ஆராதித்தே திரிகின்றனர் .  வாலு ம், மூக்கும் , உயரம்  நிறமென ஆசை தீர வாங்கி சேர்த்த அன்பு கோவை சேவல்கள். கிளிமூக்கு செவளை  கிளி மூக்கு இனச்சேவல்கள் அழகுக்கு பெயர்போனவை. இது ஒரு அழிந்து வரும் ஒரு இனவழி, ஓரிரு சேவல்களே வாழ்ந்து வருகிறது, இதன் இனவிருத்தி விகிதம் குறைந்து கொண்டேவருகிறது. இவை அளவான உடல் அளவும், சிறியதாக வால் அளவும் கொண்டவை. நான் இந்த வகை இனவழியில் நான்கு சேவல்களை பார்த்திருக்கிறேன். இவை பெரும்பாலும் கத்திபூ வகையான கொண்டைகளை கொண்டவை. இதன் மூக்கு மற்றும் கவுள் பார்ப்பதற்கு இல்லாதது போலே தோன்றும். கட்டை மூக்கு இனச்சேவல்கள் பெரும்பாலும் சற்றே உயரமானவை.. நல்ல வால் தரம் கொண்டவை.. கட்டை மூக்கு எட்டு மாத மயில் பட்டா 

கத்திக்கட்டு

உக்கிரம்   விசாரிங்கப்பா! அந்த விக்கிபீடியாவ!!  ஆறாயிரம் வருசந்தானு!  அசால்ட சொல்லிபுட்டாங்கே!! வீரத்த  வெளச்சு மானத்த நட்டு, சல்லிகட்டும், சாவகட்டும் நடத்துன ஊருட நாம!!  ஆனா வேளக்கம் சொல்லுற து  வெள்ளைக்காரன் பாசையில...     செவலைதான்... ஆமா சிவப்பு தான் ஊதகாத்து  ஊரை எழுப்புன.. உருவி சாவதான்.... புலினிரமும், புண்ணாக்கு  தின்னே வளந்த மயில சாவதான்  அழகுதான்... மக்கசனம்  பூலாம் வலசு சாவல் கட்டு  மாருல போட்டு வளர்த்தது தான் ..         மூணு இஞ்சி கத்திய  முண்டுல கட்டி இறக்கிவிட்டு  பாருவே... செவுணி கிழிஞ்சு செதஞ்சு போகும்.. போட்டிக்கு வந்த  சாவல அப்புறம் பொத்துனமாதிரி  தூக்கிப்போவனும்  ஏரு புடிக்கிற கூட்டமெல்லாம்  எட்டி நின்னு பாக்கும்  ஈராசு மூராசுணு  பேரு வச்சு திரிஞ்ச பயலுவ நாம   ஆட்ட என்னவோ அரமணி நேரந்தான்  அஞ்சு நிமுஷந்தா ஆட்டய  முடிச்சிட்டு போய்கிட்டே இருப்போம்ல.. அனந்தன் 
சேவல்கள் பற்றி உமக்கென்ன தெரியும்? இக்கேள்வியை நம்மில் சிலரிடம் கேட்டால் "காலையில் கூவும்", "ஆண் கோழி சிவப்பு நிறத்தில் கொண்டையுடன் கிராமத்தில் பார்த்திருக்கறேன்" இது தான் பதிலாய் கிடைக்கும். முருக பக்தியில் முத்திப்போனவர்கள் கொடியில் கூவியதை கூறுவார். " இதுதான் உலகின் மிகப்பழமையான விளையாட்டின் விதை என எத்தனைபேர் அறிவர் "? தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டு " சாவல் கட்டு " பலரின் குல கௌரவங்களையும் , பல கொடூர உண்மைகளையும் கொண்டதென " ஆடுகளம் " படத்தின் அரைபகுதியில் காட்டினர் . இது மட்டும்தானா ஊரின் பெருசுகளும் , புல்லட்டு   பாண்டிகளும் , விடலை பெண்களும் சகட்டுமேனிக்கு சாவல் பிரியரயிருப்பர்.  ஆம் நானும் அப்படி ஒரு சேவல் பிரியன் தான்!!! என் பெயர் சேட்டன் பிரசன்னா நான் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளன் மற்றும் ஆர்வலன். எனக்கு சிறு வயதில் இருந்தே விலங்குகள் மீது பெரியளவு ஆர்வம், குறிப்பாக சேவல்கள். என் தெருக்களில் சேவல் சண்டை விடுவதும் காவலரை கண்டு பயந்து ஓடுவதையும் பார்த்த நியாபகம். இதை கண்ட நானும் வண்ண