Skip to main content

Posts

Showing posts from November, 2014

வீழ்ந்த வால்

வரலாறாய் போன வால்சேவல்கள்!!                          வால்சேவல்கள் முன்னொருகாலத்தில் எங்கும் பரவி இருந்தது, அதன் அழகும் மிடுக்கும் தோற்றமும் காண்போரை  கவரும் வண்ணம் இருக்கும். அதன் அழகு மயிலையே பொறாமைப்படும் அளவில் இருந்தது. அத்ததகைய வால்சேவல் இனங்களின் பெரும் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. அவைகளும் நம்மால் காக்கப்பட வேண்டிய இனங்களில் ஒன்று. முதலில் சேவல்களை கடவுளாய் கண்ட மனிதன் பிறகு அவற்றை கடவுளின் பெயரால் அழிக்க ஆரம்பித்தான். இவ்வாராக ஒரு பாதி அழிய சூழ்நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப காரணிகளால் மீதமும்  அழிவை நோக்கி பயணித்தது. இப்போது இருக்கும் இளைஞர் கூட்டம், பழமையை நோக்கும் வண்ணம் இவ்வகை இனங்களை இனக்கண்டு வளர்கின்றனர், இருந்தும் என்னபயன் அழிந்ததோ ஆயிரக்கணிக்கில் ஆயிற்றே. இன்னும் இவ்வகை சேவல்கள் எட்டாக்கனியாய் தான் உள்ளன. 2 முதல் 3 மீட்டர் வால் நீளம் கொண்ட சேவல் இனங்கள் இப்பொழுது 1/2 அடி 1 அடி வாலாக உருவெடுத்துள்ளது. சேவல் வளர்ப்போர் எங்கு தேடும் பழமையான சேவல் கிடைப்பது இல்லை, அவ்வாறே எங்கும் இருந்தால் அதன் விலையோ 60,000 முதல் 80,000 வரை.              சேவல் வளர்ப்